கும்பகோணம், ஏப். 1 –

கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும், அனைத்து காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் பங்கேற்று உடற்பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.

கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக எல்லைக்குள் உள்ள கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுக்கா, பட்டீஸ்வரம், சுவாமிமலை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல்  நிலையங்களில் பணியாற்றும் அனைத்து நிலை காவலர்களுக்கும் காவல்துறை அலுவலர்களுக்குமான சிறப்பு மருத்துவ முகாம் இன்று கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மைய வளாகத்தில்  கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் நடைபெற்றது, இதில்  இரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவு, கண் பார்வை பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு நோய் அறி குறிகளுக்கும், குறைபாடுகளுக்கும் இச்சிறப்பு மருத்துவ முகாம் பயனாக அமைந்திருந்தது, மேலும், இம்முகாமில், தேவைப்படும் காவலர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here