சென்னை, அக். 02-
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் வானகரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஞானப்பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயசுதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க வின் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் வளர்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே சண்முகம் கிராம சபையில் பொது மக்களோடு கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார்.
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை சுட்டிக்காட்டி அனைத்தையும் மீட்க வேண்டும் என்றும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் பராமரிக்க வேண்டும், புதிய விரிவாக்க சாலைகளை போடவேண்டும், நெடுஞ்சாலையில் குப்பைகளை கொட்டி துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவ கூடிய அவல நிலை மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து மற்றும் இருசக்கர வாகனங்கள் நடைபாதை வாசிகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களை போக்க ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கோரிக்கைகளை வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசு ஊராட்சி வளர்ச்சி திட்டத்திற்கு கொண்டு வந்த திட்டத்தை ஊராட்சியில் அமல்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருகிறது .என்று பல்வேறு பிரச்சனைகளை கிராம சபையில் அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை முன் மொழிந்தார். இன்னும் சில மாதங்களில் அனைத்துக்கும் தீர்வு காண வேண்டும் என்று அரசு அதிகாரியிடம் தன் கருத்துகளை எடுத்துச் சொல்லி விளக்கினார். பாஜக பிரமுகரின் இப்பேச்சுக்கு பொதுமக்கள் கைதட்டி உற்சாகம் அளித்தனர்.