கும்பகோணம், ஏப். 14 –

கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் “சோபகிருது” என அழைக்கப்படும் சித்திரை திருப்படிக்கு தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று இங்கு திருப்படி பூஜை நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில்  திரளான பக்தர்கள் பங்கேற்று இத்தமிழ் வருடப்பிறப்பினை வெகுச் சிறப்பாக கொண்டாடி உளம் மகிழ்ந்தனர்.

மேலும் இத்தலத்திற்கு தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகமாகயிருந்து வருகிறது. மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரச் சொல்லுக்கான பொருளை தனது தந்தை சிவப்பெருமானுக்கே குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும், இத்தலத்தில் உள்ள திருமுருகப்பெருமான் அருள்மிகு திருசுவாமிநாத சுவாமி எனப்போற்றப்பட்டு வருகிறார்.

மேலும், இத்தகு பெருமைகளைக் கொண்ட இத்திருத்தலத்தில் ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத பிரஜோத்பத்தி என தொடங்கி குரோதன, அட்சய என முடிவுறும் 60 தமிழ் வருட படிக்கட்டுகளுக்கும் விசேஷ திருப்படிப்பூஜை செய்வது வழக்கமாகும்.

அதுப்போன்று இன்று 60 தமிழ் வருட வரிசையில் 37வது தமிழ் வருடமான “சோபகிருது” என கூறப்படும் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், கும்கும்யிட்டு, ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வெற்றிலை, தேங்காய், பூ, பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சமுக கற்பூரதீபம் காட்டி மகா தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் திரளானப் பக்தர்கள் திருப்படி பூஜையில் பங்கேற்று, திருப்படிகளில் திருவிளக்கேற்றினார்கள். மேலும் இன்று பிலவ தமிழ் வருடப்பிறப்பை யொட்டி மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது தங்ககவசம், வைரவேலுடன் இராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here