ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டத்திற்கு கடலாடி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவகன் பற்றாளராக பங்கேற்று குடிநீர் சேமிப்பு குறித்து விளக்கமளித்தார்.
குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படும், வீட்டில் குடிநீர் வீணாகமல் பயன்படுத்த வேண்டும்.கொசுக்கள் மூலம் டெங்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.பிஎம்ஓய்ஏ வீடு குறித்தும் விளக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் வறட்சி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கிராமங்களை சுகாதார வைத்துக்கொள்ளவும் துாய்மை இந்தியா திட்டத்தை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைத்தார். ஊராட்சி செயலாளர் ஜெயபால் கிராம சபை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். கூட்டத்தில் திரளான பொது மக்களும் மகளிர் குழுக்களும் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here