திருவாரூர், டிச. 01 –

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கியை ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

திருவாரூர் ரயில்வே காலனிச் சேர்ந்த உத்திராபதி மகன் சுப்ரமணியன் (70) இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வூதியத்தை பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்துள்ள சேமிப்பு கணக்கு மூலம் கடந்த 2011 செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் பெற்று வருகிறார்..

இந்நிலையில் சுப்பிரமணியன் தன்னுடன் பணியாற்றிய ஜெகவீரபாண்டியன் என்பவர் பெற்ற கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். அந்தக் கடனை உரிம காலத்தில் ஜெகவீரப்பாண்டியன் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஜாமீன் கையெழுத்து போட்ட சுப்பிரமணியனின் ஓய்வூதியத்தை எடுக்க முடியாத வகையில் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுப்பிரமணியன் வங்கி தொடர்பு கொண்டபோது, ஜெகவீரபாண்டியன் கடனை திரும்ப செலுத்தாததால், ஜாமீன் கையெழுத்திட்ட தங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை முடக்க விதிமுறைகள் இல்லை என்பதை சுப்பிரமணியன்  எடுத்துக் கூறியும் வங்கி அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து, சுப்பிரமணியன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் சக்கரவர்த்தி  மனுதாரர் சுப்ரமணியன் ஓய்வூதியத்தை நம்பியே குடும்பம் நடத்தி வந்துள்ளார். அந்த ஓய்வூதியத்தை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தி அவருக்கு வங்கி சிரமத்தை கொடுத்துள்ளது.

 

ஓய்வூதியத்தை முடக்குவதற்கு வங்கிக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. எனவே தவறான சேவை வழங்கியதற்காக ரூ. ஒரு லட்சமும்,  மனுதாரர் சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.ஒரு லட்சமும், மேலும்,  வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here