திருவாரூர், மார்ச். 25 –

திருவாரூர் மாவட்ட தி.மு.க.  செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருவாரூர் நகர திமுகவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது, எதிர் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடக்கவிருக்கும் கலைஞர் கோட்டம் மற்றும் அறிவாலயம் திறப்பு விழா குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு தொடக்க விழாவை திருவாரூரில் கொண்டாடுவதென தீர்மானித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இம்மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்து அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வரும் 4-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் வருகையை முன்னிட்டு, அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிப்பது எனவும், மேலும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் அவை தலைவர் தென்னன் அவர்களின் 100 -வது பிறந்தநாள் பொதுகூட்டத்தை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இன்று நடைப்பெற்ற திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் தெரிவிக்கும் போது,

கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்வை திருவாரூரில் கொண்டாடுவது என தீர்மானித்த தமிழக முதல்வருக்கு திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனவும், மேலும் அரசியல் பாகுபாடற்ற முறையில் திருவாரூர் மண்ணை சேர்ந்த அனைத்து மக்களும், இவ்விழாவினை குடும்ப நிகழ்வாக கருதிக் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றார்.

மேலும், எதிர்வரும் ஏப்ரல் நான்காம் தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலைஞரின் உற்ற நண்பர் தென்னன் அவர்களின் நூற்றாண்டு நிகழ்விலும், மேலும், அதனைத் தொடர்ந்து முன்னாள் அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் திருவுருவப் படத்திறப்பு விழாவிலும் பங்கேற்க திருவாரூருக்கு அமைச்சர் வருகை தருகிறார் என அப்போது அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here