தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியை அல்லிநகரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார்.
தேனி; ஆக, 30-
தேனி அல்லிநகரத்தில் இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. அப் பேரணியை அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சேகர் கொடியசைத்து வைத்தார். பின்பு அப்பேரணி அல்லிநகரம் பள்ளி வாளாகத்திலிருந்து தொடங்கி தேனி பெரியகுளம் சாலை பொம்மையகவுன்டம் பட்டி வழியாக. அல்லிநகரத்தில் உள்ள பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் தலை கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்றவரே வாகனத்தை இயக்க வேண்டும் இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யக் கூடாது உட்பட பல தரப்பட்ட விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு பாதகைகளை ஏந்திக் கொண்டும் எமன் வேடம் அணிந்துக் கொண்டு ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனார். இந்த ஊர்வலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் T. பரந்தாமன், பள்ளி துணை முதல்வர் ப.வினோத்குமார், மேலாளர் ப. கார்த்திகேயன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.