திருவள்ளூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில். 900 வது நாளாக ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் தளபதி விஜய்யின் ஆணைப்படி பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் அறிவுறுத்தலின்படி கடந்த 2021ஆண்டில் திருவள்ளூர் தொகுதி, பூந்தமல்லி தொகுதி, நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் தினந்தோறும் 100 க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று மார்ச் 2 யில் 900 வது நாளாக ஏழை மக்களின் பசியை ஆற்றும் விதமாக நூற்றுக்கு மேற்பட்ட ஏழை மக்களுக்கு ருசியான காலை உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்ட ஏழை மக்கள் விஜய் மனதார வாழ்த்துகின்றனர்.
மேலும் இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது முதல்வராக வருவதற்கு முன்பாகவே விஜய் ஏழை மக்களின் பசிகளை தீர்ப்பதாகவும் அவர் முதல்வராக வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் பசிகளையும் தீர்ப்பார் என்றும்
அவருக்காக நாங்க உறுதுணையாக நிற்போம் என்று தெரிவித்தனர்.