திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி..

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என நான்கு பெரும் விழா அப்பள்ளியில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைப்பெற்றது.

அச்சிறப்பு மிகு விழாவிற்கு வட்டார தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவழகன் மற்றும் பாலசுப்பிரமணியன் தலைமையேற்க, பெற்றோர் ஆசிரியர் கழக இணை தலைவர் செல்வராஜன், தலைமை ஆசிரியை கிரிஜா, வட்டார மேற்பார்வையாளர் அனுப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அவ்விழவின் நிகழ்ச்சி நிரலை வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்  தமிழ்மணி  தொகுத்து வழங்கினார்.

முன்னதாக தலைமையாசிரியை கிரிஜா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் மலர்விழி ஆண்டறிக்கை வாசித்தார். பணி ஓய்வு பெற்ற நல்லாசிரியை  சேது ராணிக்கு வெகுச்சிறப்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின் சார்பில் ஆசிரியர்களால் பரிசு பொருள் நல்லாசிரியை சேதுராணிக்கு வழங்கப்பட்டது.

அவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என திரளானவர்கள் பங்கேற்று விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

தொடர்ந்து நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய ராய் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் துரை ராயப்பனுக்கும், ஒருங்கிணைப்பாளர் வேதகிருஷ்ணனுக்கும் பள்ளியின் சார்பில்  நன்றி தெரிவிக்கப் பட்டது.

மேலும் திருவாரூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. பணி ஓய்வு பெற்ற ஆசிரியரின் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவின் நிறைவாக ஆசிரியர் பாஸ்கரன்  நன்றி கூற பள்ளியின் முப்பெரும் நான்கு பெரும் விழா இனிதே நிறைவு பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here