சோழபுரம், ஜூன். 15 –
திருவள்ளூர் மாவட்டம், சோழபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வைரம் குப்பம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சோழவரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் செல்வசேகரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பகலவன் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினறும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரருமான கல்வியாளர் டிஜே கோவிந்தராஜன் கலந்துக்கொண்டு கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து புதிதாக நிறுவப்பட்டுள்ள கல்வெட்டை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிராம பெண்களுக்கு புடவைகளை வழங்கினார்.
மேலும் கிராம மக்களுக்கு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கி சிறப்பித்தார் . இந்நிகழ்ச்சியில் பாளையம், ஜெயச்சந்திரன், கலைச்செல்வன் ,ஜெயபால், பிரகாசம் ,சரவணன் ,ரஞ்சிதம், உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்,
























