டெல்லி, நவ. 01 –

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 106.31 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது  98.20  சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 12,718 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,36,68,560  என அதிகரித்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.46 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,58,817; இது 248 நாட்களில் மிகவும் குறைந்த அளவு.

வாராந்திர பாதிப்பு விகிதம் 1.17. கடந்த 38 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.42 ஆகும்.  கடந்த 28 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதுவரை மொத்தம் 60.92 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here