பொன்னேரி, ஜூன். 15 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர் கண்காட்சி திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உழவுத் தொழிலுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் அதற்குரிய வல்லுநர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் சபிதா பாபு மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவன அலுவலர்கள் கிரிஷ், குல்திப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பொன்னேரி சுற்றுவட்டார விவசாயிகள் திரளானோர் பங்கேற்று தங்களுக்கு தேவையான உழவு தொழில் உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.























