திருவள்ளூர், ஆக. 08 –

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்துள்ளது வழுதிகைமேடு என்ற கிராமம். அக்கிராமத்தில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா நடைபெற்றது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழபுரம் எனும் நாட்டின் தலைநகரான ஞாயிறு கிராமத்தினை தலைமையிடமாக கொண்டு சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்தான். ஞாயிறு கிராமத்திற்கு முதன் முதலாக குதிரையில் வரும் போது, சிவனுக்கு பூஜை செய்யும் நோக்கில் தாமரை மலர்களை தேடி ஞாயிறு அருகே வழி தெரியாமல் திகைத்து நின்றான். அப்போது, அருகே இருந்த குளத்தில் தாமரை ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. ‌அதனை பறிக்க செல்லும்போது அது நகரவே தனது கத்தியை அதன் மீது வீசினான். அதிலிருந்து ரத்தம் தெரித்து அதனால் அவன் கண் பார்வை பறிபோனதாகவும், பின்னர் சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்ததாகவும், சோழ மன்னன் வழி திகைத்த மேடு எனப்படும் அப்பகுதியே இப்பொழுது வழுதிகைமேடு என அழைக்கப்படுகிறது. என இக்கிராமம் குறித்த தல வரலாற்றினை அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சிறப்பு மிக்க இக்கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் 326 வது ஆண்டு தீமிதி திருவிழா மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது‌.

சுவாமி திருத்தேரில் அமர்ந்து ஊர்வலமாக பக்தர்கள் புடை சூழ வருகை புரிந்து தீக்குண்டம் அருகே எதிர்நோக்கி நின்றபோது பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிவர்த்தி செய்யும் பொருட்டு 500க்கும் மேற்பட்டோர் தீக்குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

இவ்விழாவினை முன்னிட்டு வான வேடிக்கைகள், மேளதாளங்கள் கச்சேரி என திருவிழா களை கட்டியது. வழுதிகைமேடு கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here