ஊத்துக்கோட்டை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாராட்சி தனியார் ஹோட்டலில் நடை பெற்றது.
இந்நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி வந்து 50 க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் அமமுக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலும் தாராட்சி ஊராட்சி செயலாளர் ராமேஷ் செஞ்சியகரம் ஊராட்சி செயலாளர் சம்பத் ஆகியோர் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர் தலைமையில் அக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவர் பேசுகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மிகவும் வலுவாக உள்ளது எனவும் ஆனால் இது போதாது இன்னும் வலுவாக மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார் எனவும், ஆனால் நமது கட்சி மக்களுக்கானது நம் கட்சியின் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை வெற்றி பெற செய்து நல்லாட்சியை அமைத்திட வேண்டும் என பேசினார்.
மேலும் கும்மிடிப்பூண்டி தொகுதி தேர்தல் பொருப்பாளர்கள் கோவிந்தசாமி மது தேவராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர்கள் ஒன்றிய பொருப்பாளர்கள் ஊராட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






















