திருவள்ளூர், பிப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் அமைந்து உள்ளது அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலாகும். அத்திருக்கோயிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத் தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அச்சிறப்பு மிகு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் அருள்மிகு ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 4 ஆம் தேதியன்று அத்திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 ஆம் நாளான இன்று வீரராகவர் கோயிலின் திருத்தேரோட்டத்திற்காக, அத்திருக்கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட அத்திருத்தேருக்கு வண்ண மலர்கள் மற்றும் பட்டு  பட்டுத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் ஸ்ரீவீர ராகவகப்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு அமர்ந்திருக்க மேல தாளங்கள் முழங்க அத்திருத் திருத்தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்துயிழுக்க அத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக திருத்தேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக அத்திருத்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள், தேர் சக்கரத்துக்கு மிளகு மற்றும் உப்பு செலுத்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர் மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here