தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நவ -19-2019 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் உள்ள பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் 82 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, சென்னை, பி.எம். பிர்லா கோளரங்கத்தில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கோளரங்க கருவி மற்றும் கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றையும் துவக்கி வைத்தார்கள்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து உயர்கல்வி கற்பதை தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும் என்றும், இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் முதலமைச்சர் 19.6.2017 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 4655.36 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
2 இப்புதிய கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடம், கணினி அறைகள், நூலகம், மாணவர் கூட்டுறவு அங்காடி, கல்லூரி முதல்வர் அறை, துறை தலைவர் அறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரியில் 3 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்;
சென்னை – காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;
சென்னை, மாநிலக் கல்லூரியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;
சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 4 ஆய்வகக் கட்டடங்கள்;
திருவண்ணாமலை – அரசு கலை கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;
கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள்;
வேலூர் மாவட்டம் – வேலூர், முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள், காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;
கோயம்புத்தூர் – அரசு கலை கல்லூரியில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்; கோயம்புத்தூர் – அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 1 கோடியே 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தெர்மல் பொறியியல் துறைக்கான முதுகலை பாடப் பிரிவுக் கட்டடம்;
சேலம் மாவட்டம் – ஆத்தூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் 3 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்; சேலம் – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;
திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்;
கடலூர் மாவட்டம் – விருதாச்சலத்தில் உள்ள திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்;
சிதம்பரம் – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வியியல் கட்டடம்;
தஞ்சாவூர் மாவட்டம் – தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் – மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 3 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள், ஒரத்தநாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகக் கட்டடம் மற்றும் கழிப்பறைகள்; கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள்;
நாகப்பட்டினம் மாவட்டம் – மயிலாடுதுறை, தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 6 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைத் தொகுதி; நாகப்பட்டினம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறைகள், 1 கருத்தரங்கக் கூடம், 4 ஆய்வகக் கட்டடங்கள், நூலகக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள்;
புதுக்கோட்டை- மா. மன்னர் கல்லூரியில் 3 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்; புதுக்கோட்டை, அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் 4 கழிப்பறை; புதுக்கோட்டை, அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – திருச்சிராப்பள்ளி, அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; துவாக்குடி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி;
திண்டுக்கல் மாவட்டம் – கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்;
திருநெல்வேலி, இராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 18 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் பணியாளர்கள் அறைகள்;
இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி, அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;
தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறைகள்; என மொத்தம் 90 கோடியே 91 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார்அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில், 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கம் மற்றும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.
மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கத்தின் மூலமாக பகலிலேயே இரவு வானின் அமைப்பை துல்லியமாக காண முடிவதுடன், பல்வேறு நாடுகளின் இரவு வான் அமைப்பு, பருவ காலங்களில் ஏற்படும் வான் அமைப்பு, கோள்களின் நகர்வுகள் போன்றவற்றை காண்பதோடு, விண்வெளிக்கே பயணம் செய்து கோள்கள், 5 விண்மீன்கள் போன்றவற்றை அருகே சென்று காண்பது போன்ற உணர்வையும் பார்வையாளர்கள் பெற இயலும். கோளத்தில் அறிவியல் கருவி மூலமாக, வானிலை, விமானத்தின் இடப்பெயர்ச்சி, செயற்கை கோளின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை அறியவும், நில அதிர்வு, சுனாமி மற்றும் இதர இயற்கை நிகழ்வுகளையும், புவியின் வளிமண்டலம், பெருங்கடல்கள், நிலப்பரப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களையும், சூரியக் குடும்பத்தின் கோள்களைப் பற்றிய விவரங்களையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும்
பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் திரு.கே. விவேகானந்தன், இ.ஆ.ப., கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) திரு சி.ஜோதி வெங்கடேசுவரன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் (பொறுப்பு) திரு.சௌந்தரராஜ பெருமாள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.