திருப்பூர் , மே. 08 –
திருப்பூரில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொருட்களை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வரும் கணவன் மற்றும் மனைவி பங்குரார்களாக சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தனியார் கூட்டு விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சி படிவத்திற்கான 2 சதவீத வரியை கடந்த 2011 முதல் 2017 வரை நிலுவைத் தொகை ரூ. 6,78,572 யை அந்நிறுவனம் செலுத்தாதினால் அந்நிறுவனத்துக்கு திருப்பூர் வணிகவரி அலுவலக உதவிக் கமிஷனர் ஜெயகணேசன் மற்றும் எழுத்தர் டி.எம்.டி.ரத்னா ஆகியோர் அந்நிறுவனத்திற்கு உடனே நிலுவைத் தொகையை கட்டச்சொல்லி அறிவுறுத்திவுள்ளனர்.
அதனடிப்படையில் அந்நிறுவன பங்குதாரர் நிலைவைத்தொகையைச் செலுத்தி அதற்குண்டான கிளியரன்ஸ் சான்றிதழ் கேட்டு உள்ளார். அது தொடர்பாக உதவிக் கமிஷனர் ஜெயகணேசன் அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டுமெனில் தனக்கு ரூ 10 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என வலியுறுத்திவுள்ளார். இதற்கு அந்நிறுவனம் சார்பில் தங்களுக்கு தற்போது உள்ள இயலாமையை வெளிப்படுத்திவுள்ளனர். இதனால் ஜெயகணேசன் தனக்கு ரூ.7 லட்சமும், எழுத்தர் ரத்னாவிற்கு ரூ. 2 லட்சமும் தர வேண்டும் என உறுதிப்பட கூறியதைத் தொடர்ந்து. அப்பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாத அந்நிறுவனம் அப்புகார் தொடர்பாக திருப்பூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி புகார் அளித்துள்ளார்.
அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை பொறிவைத்து பிடிக்கும் நடவடிக்கையில் அத்துறையினர் ஈடுப்பட்டு கடந்த மே 6-2022 ஆம் தேதியன்று ஜெயகணேசன் புகார்தாரரிடம் இருந்து ரூ. 7 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அதில் ரூ.5 லட்சத்தை அவரது உணவுப்பையிலும் ரூ.2 லடசத்தை தற்காலிக ஊழியராக வேலைப்பார்த்து வந்த சகாயராஜ் என்பவரிடமும் கொடுத்துள்ளார். அதுப்போன்று ரத்னா லஞ்சமாக பெற்ற ரூ. 2 லட்சத்தை தனது கைப் பையில் வைத்திருந்த நிலையில் திருப்பூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.























