கரூர், மே. 08 –

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் வசந்தி பட்டா பெயர் மாற்றம் செய்ய புகார்தாரரிடம் ரூ. 3 ஆயிரம் கேட்டுப்பெற்றார். அவ்வழக்கு தொடர்பாக கரூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப் 29 – 2022 தேதியன்று கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் வசந்திக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் தண்டத்தொகையும், அதேப்போன்று லஞ்சம் பெற்றதற்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் தண்டத் தொகையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென அத்தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here