தென் குமாரப்பாளையம், சனவரி. 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரி கிருஷ்ணன் …

அஇஅதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,  பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள தென்குமரபாளையம் ஊராட்சியில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கடசிகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அ.இ.அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதற்கான இணைப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னபாலு (எ) P.பாலசுப்பிரமணியம் ஏற்பாட்டிலும் முன்னிலையிலும், தென் குமாரப் பாளையத்தில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சிக்கு அதிமுக தலைமைக் கழக அமைப்பு செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்ட மன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமைத் தாங்கினார்.

மேலும் அந்நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சார்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் அக் கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் போன்னாடைப் போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வரவேற்றார். தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் அதிமுக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

அந்நிகழ்வின் போது, வி.ரங்கராஜ் அதிமுக பொதுக்குழு உறுப்பினர், மாமரத்துப்பட்டி மணிகண்டன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட வர்த்தக அணித்தலைவர் முரளி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிழக்கு துணைச் செயலாளர் பி, நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அதிமுக செயலாளர், தென்குமாரபாளையம் ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிளை கழகச் செயலாளர்கள் விஜயராகவன், சரவண பிரபு, சோமு, மயில்சாமி, தேவேந்திரன் மற்றும் திரளான அதிமுகத் தொண்டர்களும் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here