நன்னிலம், மார்ச். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

காணொளிக் காட்சி வாயிலாக ரூ.306.94 இலட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக கட்ட த்தையும் ரூ. 28.81 இலட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ குத்து விளக்கேற்றி வைத்து புதிய அலுவலக கட்டடங்களை பார்வையிட்டார்.

தமிழக முதலமைச்சர் மயிலாடுதுறையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் புதிய வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடத்தினை திறந்து வைத்தார்.

மேலும் அவ் அலுவலக புதிய கட்டடமானது, தரைதளம் (6233 சதுர அடி), முதல் தளம் (6233 சதுர அடி), தள அறை (657 சதுர அடி) என மொத்தம் 13,123 சதுர அடி பரப்பளவில் ரூ. 306.94 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் விசாரணை, கணினி அறை, வட்டாட்சியர் அறை, அலுவலகம், எழுதுபொருட்கள் வைப்பறை, முக்கிய பிரிவு, ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை, முதல் தளத்தில் பதிவறை, அலுவலகம், கூட்டரங்கம், தபால் அனுப்புதல் மற்றும் பெறுதல் அறை, கழிவறை வசதியுடன் அமையப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் குருமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here