மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது பகல் நேரத்தில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வீசுவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரங்கம்பாடி கோட்டை மற்றும் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவிலேயே ஓசோன் காற்று அதிகம் வீசும் பகுதியாக தரங்கம்பாடி விளங்கி வரும் நிலையில் இன்று மாலை வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடல் கொந்தளிக்க கூடும் என்ற எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.