மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி ஆகியோர் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தனர். கவுதம் மேனன் இணைய தொடராக எடுத்து வருகிறார்.

பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜெயலலிதா நினைவு நாளான கடந்த டிசம்பர் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்துக்கு தீவிர ஆராய்ச்சிகள் செய்து பிரியதர்ஷினி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தார். படத்துக்கான திரைக்கதை புத்தகத்தையும் பதிவிட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கும் இணைய தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார். விஜய் இயக்கும் படத்துக்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக இணைந்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here