கும்பகோணம், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்..

கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராம் புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 18 ஆம் தேதி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை,  நடைபெற்றது.

காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது,  தொடர்ந்து இன்று  2ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, மூலவர் விமான கலசத்திற்கு  சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,

அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here