கும்பகோணம், பிப். 16 –

கும்பகோணத்தில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அத்தொழிலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ஆகியவற்றை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

கும்பகோணம் தாலுக்கா காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு ) பேபி மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சீதா ஆகியோர் அடங்கிய தனி படையினர்,  உள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட அன்னை அஞ்சுகம் நகரில் செல்போன் மூலமாக ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பகுதியில் சோதனையில் ஈட்ப்பட்டனர்.

இந்நிலையில் அப்போது அங்கு அத்தொழிலில் ஈடுப்பட்ட சோழபுரம் பரமேஸ்வரன்,  கும்பகோணம் ரம்யா, முருக்கங்குடி பிரேமி ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து, ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள், ஆறு செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட அம் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து சோழபுரம் பரமேஸ்வரன் மட்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் ஆன்லைன் விபசாரத்தில் மூவர் கைது செய்யப்பட்ட அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here