சோழவரம், மார்ச். 29 –
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் அம்மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு, சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைப் பெரும் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சிகள் தோறும் தரமான சாலைகள் அமைக்கவும், மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பிரகாஷ், பாஸ்கர், உள்ளிட்ட 23 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் அலுவலக மேலாளர் நன்றி உரை நிகழ்த்தினார்.



















