செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி 

திருவண்ணாமலை, ஆக.18-

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் எரும்பூண்டி தலைச்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தி(53) இவரது கணவர் குட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மூத்தி ஆட்சியர் பா.முருகேஷிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் என் கணவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். வீட்டில் தனியாக கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

இப்பகுதியை சேர்ந்த சிலர் என்னை நரபலி தரப் போவதாக மிரட்டி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here