காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்டம், சக்தி பீட தலங்களில் ஓட்டியாண பீடமாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் வெகுச் சிறப்பாகவும் பிரமண்டமாகவும் நடைபெற்று வருகிறது.
மேலும் மாசிமக பிரம்மோற்சவ உற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற 9-ம் நாள் இரவு உற்சவத்தில் சிகப்பு நிறபட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதப்பூ,செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலர் மாலைகள், சூடி, காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளிக் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார். மேலும் ராஜ வீதிகளில் வெள்ளித்தேரில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து உளம் உருகி வணங்கினார்கள்.