செய்தி சேகரிப்பு இரமேஷ்

திமுக தொண்டர்கள் இடத்திலும், பொதுமக்களிடத்திலும், திமுகவின் கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்களின் குறைகளை எளிதில் அறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வகையில்,  திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில்  கலைஞர் பாசறை  அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்.

திருவிடை மருதூர், செப். 5 –

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பில் கஞ்சனூரில் கலைஞர் பாசறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

பின்னர்  தலைமை கொறடா கோவி செழியன் பேசுகையில் திமுகவின் கொள்கைகளையும் கடந்து வந்த பாதைகள் குறித்தும் தொண்டர்களும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய கலைஞர் பாசறை திறக்கப் பட்டுள்ளதாகவும்

இத்தகைய பாசறைகள் ஒவ்வொரு கிராமங்களிலும் படிப்படியாக தொடங்கப்படும் எனவும் இந்தப் பாசறையில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்யயும் வகையில் செயல்பட ஏதுவாக  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

 மேலும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகள்  ஒலிக்க உற்சாகத்துடன் திமுகவின் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஒன்றிய துணைத்தலைவர் தேவி ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்  திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here