கும்பகோணம், டிச. 13 –
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எஸ் புதூரில் அரசு தலைமை கொறடா இன்று துவக்கி வைத்தார் தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் சென்று கொண்டிருந்த பேருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை புதிய வழித்தடத்தில் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். என பொதுமக்கள் அரசு தலைமை கொறடா கோவி செழியனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததை தொடர்ந்து, இன்று புதிய வழித்தட நகரப் பேருந்து கும்பகோணத்திலிருந்து திருவிடைமருதூர் ஆடுதுறை ஆவணியாபுரம் மஞ்சள்மல்லி வடமட்டம் எஸ் புதூர் வழியாக எரவாஞ்சேரி வரை செல்லும் தடம் எண் 346ஏ பேருந்தை இன்று எஸ் புதூரில் இருந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின் மக்களோடு பேருந்தில் ஏறி கும்பகோணத்திற்கு பயணச்சீட்டு பெற்று பேருந்தில் பயணம் செய்தார். இதில் மண்டல பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி துணை மேலாளர் கணேசன் உதவி மேலாளர் நடராஜன் கிளை மேலாளர் மதன்ராஜ் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெரும் தலைவர் அண்ணாதுரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜி கே எம் ராஜா சரவணன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக விவசாய அணி மாநில செயலாளர் முருகன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
தொடர்ந்து எஸ் புதூர் பகுதியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.