திருவாரூர். மே. 23 –

ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 31, பருத்தியூர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழா இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாட்டால் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் தீமிதி திருவிழா துவக்கமாக  சென்ற வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி   இன்று காலை பக்தர்கள் கையில் காப்பு கட்டியுடன்  அம்மன் புறப்பட்டு தெரு வீதிகளை வலம் வந்து பகதர்கள் வீடுகளில் அர்ச்சனை செய்து அம்மனுக்கு பணத்தால் மாலைகட்டி போட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து அம்பாள் சக்திகரகம் தீக்குண்டத்தை அடைந்து சுற்றி வந்த உடன் முதலில் சக்திக்கும் இறங்கியதும் தொடர்ந்து அழகுகாவடிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குண்டதில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை கண்டுகளித்தனர். தொடர்ந்து  பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கினர். இரவு வானவேடிக்கை நிகழ்ச்சியும் தொடர்ந்து கிராமிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here