கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அடுத்த உத்திரை என்ற கிராம மெயின் ரோட்டில் வசிப்பவர் கணேசன் மனைவி லலிதா வயது 45 விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
காலையில் வீட்டின் பின்புறம் பசுமாடு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த லலிதா சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவ செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். விசாரணையில் பசு மாடுகளை திருடி சென்றவர் இன்னம்பூர் செம்மலை மகன் மதுசூதனன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் ஆகிய இருவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து இன்னம்பூர் செம்மலை மகன் மதுசூதனன் வயது 33 என்பவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகநாதன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.