கும்பகோணம், ஜன. 9 –
உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான இன்றிரவு நடைபெற்ற கல்கருட சேவையில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் போற்றப்படுகிறது இத்தலத்தில், மார்கழி தெப்ப உற்சவம் திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 06ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகரயுலாவும் நடைபெறுகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான இன்றிரவு உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் கொரோனா பெரும் தொற்று மற்றும் முழு ஊரடங்கு யொட்டி பக்தர்கள் இன்றி கல்கருட சேவை நடைபெற்றது தொடர்ந்து 9ம் நாளான வருகிற 14ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்சவம், பின்னர் 15ம் தேதி சனிக்கிழமை பட்டச்சட்டத்தில் பிரகார உலா 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உற்சவம் இவ்வாண்டிற்காண மார்கழி தெப்போற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.






















