திருவண்ணாமலை, ஜன. 14 –

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., நேற்று (13.01.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் விடுதிக்கு புதியதாக பெயின்ட் அடித்தல், விடுதி அறைகளில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், கபோர்டுகள் ரிபேர் செய்தல், விடுதி கழிவறை, சுகாதார வசதி, மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடுகள் செய்திட ரூ.39.90 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றது.  

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பவன்குமார் ரெட்டி, இ.கா.ப., மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here