திருவண்ணாமலை, ஜன. 14 –
அரசாணையின்படி ஊரக உள்ளாட்சி கட்டடங்களில் சிறுபழுது மற்றும் பெரும்பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அறிவுரைகளில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையட்டி (14.01.2022) அன்று அனைவரின் பங்கேற்புடன் ஒரு சிறப்பு இயக்கமாக கீழ்க்கண்ட தூய்மைப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற / ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களுக்கு வண்ணம் பூசுதல் (கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள கட்டிடங்கள் தவிர்த்து)
மேநீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல் (குளோரினேஷன் செய்து தூய்மையான குடிநீர் வழங்குதலை உறுதி செய்தல்) ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகள் (தெருக்கள் சுத்தம் செய்தல் மற்றும் திடக்கழிவு அகற்றுதல்) ஊரகப் பகுதிகளில் உள்ள அலுவலகங்களை சுத்தமாக வைத்திருத்தல்
மரம் நடுதல் பணிகள் மேற்கொள்ளுதல் கொரோனா / ஒமிக்கிரான் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடுதலை ஊக்குவித்தல்
கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் மேற்கண்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மூலமாக மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பணிகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதிபடுத்தும் வகையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பு நிர்ணயம் செய்துள்ளதுடன், வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்களும் (வ.ஊ. கி.ஊ) கோட்ட அளவில் சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அவர்களுக்கும் பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சிறப்பு இயக்கம் நடைபெறுவதை சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களிடையே தெரிவிக்கவும், மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்திடவும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.





















