திருத்துறைப்பூண்டி, ஏப். 28 –
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சாலை கடையில் இருந்து கட்டிமேடு வரை பத்தாண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் ( மா) கட்சி சார்பில் பாடை ஊர்வலம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபண்டி ஒன்றியம் ஆதிரெங்கம் சேகல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய சாலை போடாமல் மக்கள் நடமாட கூட தகுதியற்ற நிலையில் குண்டும் குழியுமாக சாலையாக மாறி இருக்கிறது.
இந்த சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைத்து தர வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் ஆதிரங்கம் கிளையின் சார்பில் பாடை ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஆதிரங்கம் கிளை செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார் பாடையிணை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் சுமந்து சென்று இந்த போராட்டத்தை துவக்கி வைத்தார்.
மேலும், இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி ஜோதிபாசு மாவட்ட குழு உறுப்பினர் டி சுப்பிரமணியன் ஏ பிரகாஷ் ஒன்றிய செயலாளர் டிவி காரல் மார்க்ஸ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் விரவி ஏ கே வேலவன் கே மதியழகன் ராஜேஸ்வரி ரங்கசாமி கிளை செயலாளர் சாமிகண்ணு நல்லதம்பி விச ஒன்றியக்கழு சுந்தரேசன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மாதர் சங்கம் வாலிபர் சங்கம் மாணவர் சங்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கடைத் தெருவில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் சுமந்து சென்று ஆதிரங்கம் வந்தடைந்தது.
அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் பொறியாளர் சூரிய மூர்த்தி காவல் ஆய்வாளர் கழனியப்பன் வருவாய் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஆதி ரங்கத்தில் இருந்து கொறுக்கை வரை சுமார் 8 கிலோமீட்டர் உள்ள சாலையை 6 லட்சத்து 75 ஆயிரத்து 80 ஆயிரம் ரூபாயில் 19 பாலங்கள் இரண்டு பெரிய பாலம் ஒரு தடுப்புச்சவர் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒப்பந்தம் போடப்பட்டு அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாத காலங்களில் இந்த சாலை பணி துவங்கி விடும் என்ற உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் இந்த பாடை கட்டும் ஊர்வலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.






















