திருவண்ணாமலை ஜன.8-
திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில், பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை ஆட்சியர் கோ.வெங்கடேசன் வழங்கினார்.
திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மு.சாந்தி, , துணைத் தலைவர் ஜெயா சங்கர், ஆகியோர் முன்னிலை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் என்.குப்பன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் பட்டா மாறுதல், முழு பட்டா மாறுதல், உட்பிரிவு, முதியோர் ஓய்வூதியம் தமிழ்நிலம் திருத்தம் தொடர்பான மனுக்கள் உள்பட 120 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த முகாமில் உடனடியாக மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் கோ.வெங்கடேசன் வழங்கினார். இந்த முகாமில் வட்ட சார் ஆய்வாளர் ஏ.சேட்டு, கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ராகுல் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் பி.ரூபா நன்றி கூறினார்.