பொன்னேரி, ஜூலை. 16 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டில் சுமார் 30 – க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.

இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இப்பகுதியில் உள்ள  கடலான வங்காள விரிகுடாவும், ஏரியும் ஒன்றிணையும் முகத்துவாரப் பகுதியாகும்.

அப்பகுதியில் சரியான வகையில் முகத்துவாரம் இல்லாத காரணத்தினால் அடிக்கடி மணல் திட்டுக்கள் ஏற்பட்டு, மீன்பிடி தொழில்களில் ஈடுப்பட்டு வரும் மீனவர்களின் படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் வெகு நாட்களாக அவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மணல் திட்டுக்களை அவர்களை தங்களின் சொந்த செலவில் தூரி வந்த தாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையின் போக்குவதற்காக அப்பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைத்துத் தர தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், அப்பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைத்திட அரசு சுமார் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுத்து, பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, ஒன்றிய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று பழவேற்காட்டில் கடற்கரைப் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. வரையிலான நீரோட்டத்தை வழிப்படுத்தும் சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் டாக்டர். ஜெயக்குமார், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பூமி பூஜைப் போடப்பட்டது. அதில் அவர்கள் இருவரும் அடிக்கல்லை எடுத்துக்கொடுத்து அப்பணியினை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அப்போது அவர்கள் தெரிவிக்கும் போது அப்பணி 3 மாதங்களில் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு வந்துவிடுமென தெரிவித்தார்கள். மேலும் அப்போது மீன்பிடியில் ஈடுப்பட்டு வரும் உங்களின் படகுகள் எவ்வித தங்குதடைகளுமில்லாது கடலுக்குள் தொழிலுக்கு சென்று வர முடியுமெனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில், வட்டாட்சியர் செல்வகுமார். பொன்னேரி நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ். பழனிச்சாமி, எம் முருகேசன் மற்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட திரளான அப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here