திருவண்ணாமலை, செப். 17 –

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல்விளைச்சல் அதிகரித்துள்ளது குறிப்பாக நடப்பு சொர்னாவாரி பருவத்தில் மாவட்டம் முழுவதும் பரவலான நெல்சாகுபடி நடந்துள்ளது.

எனவே வெளிமார்க்கெட்டில் நெல்விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மாதம் 16ந் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் முதன் முறையாக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த மாதம் 31ந் தேதி வரை மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையேற்று வரும் 20ந் தேதி வரை நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட உத்தரவிட்டார்.

ஆனால் தற்போது காலஅவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனவே இந்த மாதம் 30ந் தேதி வரை நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று அறிவித்துள்ளார்.

கூடுதலாக 10 நாட்கள் திறப்பதால் அதிகமான விவசாயிகள் பயன் பெறுவார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் செப் 16ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here