திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதூர் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் மற்றும் கலசப்பாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று (25.10.2021) ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கல்யாண மண்டபம், தங்கும் விடுதியினை கட்டுவதற்கான இடத்தினையும், கலசப்பாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) ஒன்றிய குழுத் தலைவர்கள் சி.சுந்தரபாண்டியன் (புதுப்பாளையம்) அன்பரசி ராஜசேகரன் (கலசபாக்கம்), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.