திருவண்ணாமலை, செப்.4-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாச்சலம் முன்னிலை வகிக்க, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 69 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு 100 சதவிதம் தடுப்பூசி செலுத்தும் இலக்கடைய பணி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளிலும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை உரிய காலத்தில் முடிக்க வேண்டுமென ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, வடிவேலு, வெங்கடேசன், ஜீவா, ஒன்றிய உதவி பொறியாளர் இந்திராகாந்தி, பணி மேற்பார்வையாளர் கே.ஆறுமுகம் உள்பட துறை அதிகாரிகள் ஊராட்சி செயலாளர்கள், பணித் தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.