திருவாரூர், ஏப். 08 –
திருவாரூர் மாவட்டம், ஒ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர் பகுதியில் உள்ள ஏழுபள்ளிகளுக்கு சுமார் ரூ. 26 இலட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களான டேபிள் டெஸ்க், நாற்காலி,கம்யூட்டர், பிரிண்டர், ஸ்மார்ட் கிளாஸ் புரஜக்டர் மேஜை, மின்விசிறி போன்ற பல்வேறு கல்வி உபகரணங்களை அந்நிறுவனம் வழங்கியது.
மேலும் கௌரிசாமி நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட வட்டாரக்கல்வி அலுவலர் இளங்கோவன் அறம் செய் என்பதை ஓ.என்.ஜி.சி சரியாக பின்பற்றி பல்வேறு நலவுதவிகளை செய்து வருகிறதெனவும், மேலும் இவ்வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பான்மை பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஓ.என்.ஜி.சி நிறைய செலவிடுகிறது என அப்போது அவர் அந்நிறுவனத்திற்கு புகழாரம் சூட்டினார்.
மேலும், தொடர்ந்து மோசஸ் அரசு உதவி பெரும் பள்ளி நிகழ்வில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் மக்களின் தேவையறிந்து நேரிடையாக பிரதிநிதிகளை அனுப்பி ஓ.என்.ஜி.சி சேவையாற்றுவதாக பாராட்டினார். மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் ரஜினி சின்னா, உமா மகேஷ்வரி சிவக்குமார், ரோட்டரி சங்க நிவாகிகள் ராஜ் கருனாநிதி, சொக்கலிங்கம், பள்ளி நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் தரமான பொருட்களை ஓ.என்.ஜி.சி வழங்குவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கொடிக்கால் பாளையம் நிகழ்ச்சியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீ வைஷ்ணவி தேவி, நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி பெனாசிர் ஜாஸ்மின் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி கஸ்தூரி மணிராவ் மருந்தாளுனர் ரமேஷ் ஆகியோர் ஓ.என்.ஜி.சி யின் இத்தகைய செயல்பாட்டால் மாணவர் சிரமமில்லாமல் படிக்கக்கூடிய சூழல் உருவாகியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தியாணபுரம் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் குளிக்கரை நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றதலைவர் மதிவாணன் பங்கேற்று ஓ.என்.ஜி.சி வழங்கிய பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி ஓ.என்.ஜி.சி நிறுவனம் சி.எஸ் ஆர்.நிதியை சரியாக பயன்படுத்தி பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது என்றனர்.
கொடிக்கால் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 இலட்சம் கௌரிசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3.0 இலட்சம் மோசஸ் அரசு உதவி பெரும் பள்ளிக்கு ரூ. 5.2 இலட்சம் கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ. 1.2 இலட்சம் குளிக்கரை மேற்கு நடுநிலை பள்ளிக்கு ரூ 2.9 இலட்சம் தியாணபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளிக்கு ரூ. 6 இலட்சம் சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3.4 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாகை சுவீட் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளில் ஓ.என்.ஜி.சி துணை பொதுமேலாளர்கள் வேணுகோபால், பிரபாகரன் சமுக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள் விஜய்கண்ணன், சந்திரசேகர் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை ஆசிரியர்கள் ராஜரெத்தினம், பிரபாவதி, ஆனந்தி, மாலதி, லதா, விநாயகராஜன்சுகந்திபாலா, சேமங்கலம் ஊராட்சி தலைவர் முருகானந்தம் சுவீட் என்.ஜி.ஓ. ராஜேந்திரன் அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த பள்ளி மேம்பாட்டு குழு தலைவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.























