கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் எதிர் வருகிற 24 ஆம் தேதி மாசிமகம் அன்று வருவதை முன்னிட்டு, அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடுவது குறித்து நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்நிலையில் அதிமுக மாநகரம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாநகர செயலாளர் ராம ராமநாதன், தலைமையில் அந்நகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன், கலந்து கொண்டு பேசுகையில் அம்மா பிறந்தநாளை 48 வார்டுகளில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும், மகளிர்க்கான கோலப்போட்டி, மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி, மருத்துவ முகாம், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். என்று அப்போது மாநகர அதிமுக கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.எனவும் தொடர்ந்து அனைத்து வாடுகளில் கழக கொடியேற்றுதல், கல்வெட்டு அமைத்தல், உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
அதில் கைத்தறி பிரிவு மாநில செயலாளர் கே.ஜி லெனின், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாநகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ராஜா நடராஜன், அம்மா பேரவை மாநகர செயலாளர் ஆயூப்கான், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், பகுதி செயலாளர்கள் ராஜி, பத்ம. குமரேசன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






















