திருவள்ளூரில் இன்று மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர், கண் காணிப்பாளர் முன்னிலையில் காவலர் அணி வகுப்பு நடைப்பெற்றது.
திருவள்ளூர்: ஏப்,14-
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 14.04.2019 ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக் குட்பட்ட திருவள்ளூர் இரயில் நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் வளாகம் வரையில் தமிழக காவல் துறையினர் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இரவிக்குமார், முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சு. பொன்னி தலைமையில் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள், ஆயுதப்படை காவல் ஆளினர்கள், த.சி.கா. படையினர் மற்றும் துணை இராணுவ படையினர் ஒன்றுச் சேர்ந்து அணி வகுப்பு நடைப் பெற்றது.
இந்த அணி வகுப்பின் போது, வஜ்ரா காவல் வாகனத்தில் ஒலி பெருக்கியின் மூலம் “ஓட்டு அளிப்பதற்கு பணம் கொடுப்பதோ, வாங்குவதோ தவறு”, “யாரேனும் பணம் கொடுப்பது தெரிய வந்தால் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்.1950 மற்றும் காவல் அவசர அழைப்பு எண்.100-க்கு தகவல் தெரியப் படுத்தவும்”, “பயமின்றி வாக்களிப்பதற்கு காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த அணிவகுப்பு நடத்தி காட்டப் படுகிறது” என தெரிவித்தனர்.