பொன்னேரி, செப். 01

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வருகிறது அரசு உலக நாதநாராயணசாமி கல்லூரி. இக்கல்லூரி 1965 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கல்லூரியில் விண்ணப்பம் செய்திருந்த செங்குன்றத்தை சேர்ந்த ஓவியா என்ற திருநங்கை மாணவிக்கு கல்லூரியில் பயில்வதற்காக B.Sc. Maths. என்ற பிரிவில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டுக்கான சேர்க்கைகள் முடிவடைந்த நிலையில் தனக்கு கல்லூரியில் பயில்வதற்கு இடம் கிடைக்காததால் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் ஓவியா கோரிக்கை அளித்தார் அவரது கோரிக்கையின் அடிப்படையில் அதை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் கல்வி துறை ஒப்புதலோடு ஓவியா என்ற மூன்றாம் பாலினத்தவருக்கு கல்லூரியில் இடம் அளிப்பதற்கான ஆணையை டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

பொன்னேரி அரசினர் உலக நாதா நாராயணசாமி கல்லூரியில் ஒரு திருநங்கை மாணவிக்கு முதல் முதலில் படிப்பதற்கான சீட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here