கும்பகோணம், மார்ச். 18 –
பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி மற்றும் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் நண்பகல் மகாமககுளக்கரைக்கு ஒருசேர எழுந்தருள, அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் சூர்யனார்கோயில் ஆதீன 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடியும், கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
மகாபிரளத்தின் போது அமிர்த குடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி வில்வனேசர் எனும் திருநாமம் பெற்று பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க நாககேஸ்வரர் என திருநாமம் பெற்றார் தாயார் பிரஹந்நாயகி சூரியன் தனது கிரஹணம் மழுங்கி கலங்கி நின்ற போது அசரீரியின்படி சூரிய தீர்த்த்தத்தில் நீராடி நாகேஸ்வர சுவாமியை வழிப்பட்டு பேறு பெற்றார் இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் தனது சூரிய கதர்களால் நாகேஸ்வரரை வழிபடுவதை இன்றும் காணலாம் இங்கு சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேஷத்திரம் என பெயர் பெற்றது
இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்தர பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 09ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் யானை, சிம்ம, சேஷ, குதிரை, காமதேனு, கிளி, பூத, சூரிய பிரபை, சந்திர பிரபை என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது விழாவின் 10ம் நாளான இன்று நண்பகல் பங்குனி உத்திரத்தினையொட்டி, பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமியும், அதுபோலவே ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமியும் பஞ்ச மூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் மகாமக திருக்குளத்தின் கரைக்கு எழுந்தருள, அங்கு அஸ்திர தேவர்களுக்கு ஒருசேர சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் சிவாச்சாரியார்கள் மும்முறை அஸ்திரதேவர்களுடன் மகாமக திருக்குளத்தில் முங்கி எழ, பங்குனி உத்திர தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து கரையில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது இதில் சூர்யனார்கோயில் ஆதீன 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மகாமக திருக்குளத்தில் புனித நீராடியும், கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.























