பட்டுக்கோட்டை, பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.

மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் அது ஒரு குப்பைமேடாகவே மாறிவிட்டது. இந்நிலையில் அந்த குப்பைமேட்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதனால் தீயானது மளமளவென பிடித்து எரியத்தொடங்கியது. அதனால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு வாசிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து உடனடியாக அவ்விபத்துக்குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குப்பைமேட்டில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 1 மணி நேரமாக போராடி அணைத்தனர்.

அத் தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. அதனால் அவ்வழியாக சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

[14/02, 9:03 am] +91 99402 88581: தஞ்சாவூர் மாவட்டம்

பூண்டி மாதா பேராலயத்தில்

கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. இதனையொட்டி பேராலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here