திருவண்ணாமலை செப்.30-

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தபாளையம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலசப்பாக்கம் வட்டம், காந்தபாளையம் கிராமத்தில் ரூ.1.61 கோடியில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் பள்ளி கட்டத்தின் குறைபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பள்ளி கட்டத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் பள்ளியின் பணிதளம் கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தாரருக்கு வழங்கப்பட்டு, பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு, கடந்த 8.12.2017 அன்று தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பள்ளி கட்டடமானது கடந்த 2018ம் ஆண்டு திறப்புவிழா செய்யப்பட்டு அன்று முதல் தற்போது வரை பள்ளிக்கல்வித்துறையின் பயன்பாட்டில் உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் தரை மற்றும் முதல் தளங்கள் மற்றும் சாய்வு தள வசதியுடன் கட்டப்பட்ட கட்டடமாகும்.

இப்பள்ளி கட்டடமானது தரை, முதல் மற்றும் இரண்டாம் தளம் கொண்ட மூன்றடுக்கு கட்டடமாக கட்ட வடிவமைப்பு செய்யப்பட்டு தற்போது நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட தரை மற்றும் முதல் தளங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேற்படி, பள்ளி கட்டடத்தின் கட்டுமான பகுதிகளான, பில்லர்கள், பீம்கள், மற்றும் ஆர்.சி.சி. கூரை பகுதிகள், தலைமையாசிரியர் அறையில் உள்ள அரைகல் சுவரில் சாய்வு தளத்தின் அடிப்பகுதியில் தரை சிறிதளவு சேதமடைந்துள்ளதை ஆய்வு செய்து, மேலும், விரிசலான பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் குறைபாடுகளை பிரத்யேகமான முறையில் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளதால், பாதிக்கப்பட்ட கட்டுமானங்களை கட்டடத்திற்கு எவ்வித சேதாரமுமின்றி இடித்து, அப்புறப்படுத்திப ஜீன்னர் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மேற்படி பணியினை மேற்கண்ட ஒப்பந்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்தம் சொந்த செலவில் இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) பரிமளா, கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், தாசில்தார் ஜெகதீசன், ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தலட்சுமி சங்கரநாதன் , ஊராட்சி செயலாளர் ரவிசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here