பூண்டி, பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் …

பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா  மந்திராலயாத்தில் உள்ள 72 அடி உயர கோபுரம் கிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில்களில் எதிர் வரும் பிப் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நெய்வேலி கிராமத்தில் 1  1/2 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ள  ஸ்ரீராகவேந்திரா மந்திரலாயாவில் ஆஞ்சநேயர் கிருஷ்ணர் உள்ளிட்ட கோவில்களில் மகா கும்பாபிஷேகம் எதிர் வரும் பிப் 22 – 2024 ஆம் தேதி நடைபெற உள்ளது .

மேலும் நெய்வேலி கிராமத்தில் அமைந்த ராகவேந்திரா கிரந்தாலயா கோவிலில் புதிதாகக் கட்டப்பட்ட 72 அடி உயர கோபுரம் பிருந்தாவனம் கிருஷ்ணர் கோவில் மூல ராமர் 7 அடி உயர ஆஞ்சநேயர் சிவன் மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகம் வருகிற வியாழக்கிழமை 22ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது எனவும்,

கோவில் விமானம் மற்றும் நிஜ விஜயராமர் மூல ராமர் ஸ்ரீ ஜெய ராமர் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் அமைந்த பிரகார மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது எனவும் மேலும் அதனை முன்னிட்டு முன்னதாக சுப்ரபாதம் கோ பூஜை சங்கல்பம் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக கலச ஹோம பூஜைகள் நடைபெற உள்ளதெனவும், இந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீ ராகவேந்திரா மகிமை கும்பாபிஷேகம் மலர் வெளியிடும் நடைபெற உள்ளதாக, அவ் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் அம்மன் சத்தியநாதன் உள்ளிட்ட கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.

மேலும் அதனை முன்னிட்டு அவர்கள் திருவள்ளூர் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலான பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் காரனோடை அம்பத்தூர் முகப்பேர் தாம்பரம் பூவிருந்தவல்லி ஆவடி ஸ்ரீபெரும்புதூர்  சுற்றுவட்டாரங்களில் உள்ள பக்தர்களுக்கும் மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்

மேலும் அக் கும்பாபிஷேகத்திற்கு  வருகை தரும் பக்தர்களுக்கு திருவள்ளூர் ரயில் நிலையம்  திருவள்ளூர் பஸ் நிலை பகுதிகளில்  கோவில் நிர்வாக சார்பாக இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here