திருவள்ளூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
கடந்த 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் 68.26 என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மாதவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்களில் 14,23,285 வாக்காளர்கள் அதாவது 68.26 சதவீதம் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை வாக்களித்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரத்தை திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது அதனை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிரபுசங்கர் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பார்வையாளர் அபு இம்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பார்வையிட்டு வாக்கு பெட்டி அறைக்கு சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வரும் ஜூன் 4ஆம் தேதி வரை ஸ்ரீராம் கல்லூரியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திர பாதுகாப்பு அறைக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் இந்த பாதுகாப்பு பணியில் 39 மத்திய எல்லை பிரிவு பாதுகாப்பு படையினர் துணை ஆணையர் தலைமையிலான காவலர்கள், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 2 வெடிகுண்டு கண்டுபிடித்து செயலை இழக்கும் பிரிவினர் மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை மற்றும் வெளி பகுதியில் சுற்றிலும் 728 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது.