விஷம் அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 25 வயது இளைஞர் மணிகண்டன் படம்

திருவாரூர், மே. 12 –

பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டி வந்த இளைஞர் திடீரென விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை குறித்து அவ்விளைஞன் தனது கைப்பேசியில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதன் அதிர்ச்சி தகவல் காண்போரை கதிகலங்க செய்கிறது. மேலும், அவ் இளைஞன் அந்தப்பதிவில் பல்வேறு தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரால் தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யபட்ட அரசு அலுவலர் மகேஷ்வரன்

திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 25)  இவருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந் நிலையில்  கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் வீடு திட்டம் மூலம் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன் மணிகண்டன் கட்டி வந்த வீடு

அப்போது தன்னிடம் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓவர் சார் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடன் பெற்று கொடுத்துள்ளார்.

அதேப் போல கீழ்த்தளம் மேலும் ரெண்டல் ஆகியவற்றை கட்டியவுடன்  இரண்டாவது தவணைக்கான  பணம் ஏறியவுடன் அதிலும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக  மகேஸ்வரன்  கேட்டதால்  அக்கம்பக்கத்தினர் மற்றும் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொண்டு ரூ.  15 ஆயிரம் கொடுத்துள்ளார்.

ஆனால் பத்து நாட்கள் கடந்தும் இரண்டாவது தவணை பணம் வராததால் மகேஸ்வரனை தொடர்பு கொண்ட போது. சரியான பதில் இல்லாததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து  அதனை வீடியோவாக சமுக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள்ள விஷம் அருந்திய மணிகண்டன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் .

இதுத் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரை தற்போது தற்காலிக பணி இடைநீக்கம் செய்து திருவரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இம்மரணம் குறித்து பேரளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here